அக்காலத்தில் காணப்பட்ட பெலிஸ்தியர் தற்போதைய பலஸ்தீனியர் அல்ல. தற்கால பலஸ்தீனர் எனப்படுவோர் அரபிய நாடுகளிலிருந்து குடிவந்த இஸ்லாமியரும் தொன்றுதொட்டு அப்பிரதேசத்திலேயே வசித்து வரும் கிறிஸ்தவத்தை பின்பற்றும் மக்களுமேயாவார். ஆங்கிலேயர் ஆட்சியிலேயே இப் பிரதேசம் பலஸ்தீன பிரதேசம் என அழைக்கப்பட்டது.
பழங்கால பெலிஸ்தர் மற்றும் இஸ்ரவேலர் எப்போதுமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்பதுபோல இவர்களுக்குள் ஆட்சி செய்யவேண்டும் என்கிற உணர்வு காலகாலமாக இருந்து வந்துள்ளது.
இந்த இரு பிரதான இனங்கள் மற்றைய பல இனங்களோடு சேர்ந்தும் பிரிந்தும் வாழ்ந்து வந்துள்ளன.
பெலிஸ்தியர் கப்தோரிலிருந்து வந்தவர்கள் என அறியப்படுகின்றது. இது இன்று கிரீட் தீவு என அழைக்கப்படுகின்றது.
இஸ்ரவேலின் மேல் கடலோர பகுதிகளை அண்டிய பிரதேசத்தில் இவர்கள் பரவினார்கள்.
நோவாவின் மகன் காம், காமின் மகன் மிஸ்ராயீமிலிருந்து பெலிஸ்தியர் உருவானார்கள் என வேதாகமம் குறிப்பிடுகிறது.
அதாவது நோவா-காம்-மிஸ்ராயீம் இலிருந்து பெலிஸ்தியர் உருவானார்கள். (ஆதியாகமம் 10:14)
காமினுடைய இன்னொரு மகனான கானான் மற்றும் அவனின் சந்ததி இஸ்ரவேல் தேசத்தில் வாழ்ந்த படியினாலேயே இஸ்ரேல் தேசத்திற்கு கானானியரின் தேசம் எனவும் பெயருண்டு.
பெலிஸ்தர் கானானியருக்கு பக்கமாக கடற்கரையோரமாக இருந்த பட்டணங்கள் காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் என்பவைகள் இவை இஸ்ரேலின் மேற்கு பக்கமாக அமைந்துள்ளன.
சில தடவைகள் பெலிஸ்தியர் மேற்கொண்டு இஸ்ரவலை கைபற்றி ஆள்வார்கள். பல தடவைகள் இஸ்ரேவலர் பெலிஸ்தியரை மேற்கொண்டு ஆண்டிருக்கின்றார்கள்.
(இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார். நியாயாதிபதிகள் 13:1)
செப்பனியா 2:5 சமுத்திரக்கரை குடிகளாகிய கிரேத்தியருக்கு ஐயோ! பெலிஸ்தரின் தேசமாகிய கானானே, கர்த்தருடைய வார்த்தை உனக்கு விரோதமாயிருக்கிறது; இனி உன்னில் குடியில்லாதபடிக்கு உன்னை அழிப்பேன்.
https://www.Tamil.bid