புதிய பாடல்களை
உம்மையென்றும் துதிப்பேன்
பாடல்கள் பாடிடுவேன்
உயிருள்ள தேவன் நீரே
மாசற்ற கர்த்தர் நீரே
சிலுவையில் மரித்தீரே
என் பாவம் நீக்கினீரே
தினமும் நான் பாடுவேன்
உம்மையே துதித்து
கர்த்தாவே நீர் செய்த நன்மைகள்
எண்ணிலடங்காதே
காத்தீர் உம் கரங்களால்
வாழ்வளித்தீரய்யா
உம் நாமம் எனக்கென்றும்
ஆறுதலே நாதா
சுகம் தரும் தேவன் நீரே
ஆற்றிடும் நாயகரே
போற்றிடுவேன் உம்மையே
மகிழ்ந்திடுவேன் உம்மிலே
நன்றி உமக்கென்றும்
நான் சொல்வேன் இயேசு நாதா
நன்றி நன்றி ஐயா
பாடிடுவேன் என்றுமே
https://www.facebook.com/uyir.jesus