1 / 3
Tamil Christian
2 / 3
Tamil Christian
3 / 3
Tamil Christian

Friday, May 21, 2021

எமது வாழ்வும் மரணமும் யார் கையில் உள்ளது? எங்கள் கையிலேயே உள்ளதா? நாம் செய்ய வேண்டியது என்ன?

உலகில் வாழ்வதற்கும் சாவதற்குமான தெரிவு யார் கையில் உள்ளது?

நம்முடைய கரங்களில் தான் உள்ளது.

யார் நம்முடைய கரத்தில் இவைகளைத் தந்தது?

இவ்விதமான பல கேள்விகளோடு நாம் இன்று மரணத்திற்கு பயந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், எம்மால் ஒன்றும் செய்ய முடியாததாகி விட்டது. நமது எதிர்காலத்தைக் குறித்துக் கலங்கிக் கொண்டிருக்கின்றோம். இன்னும் வாழ்வதற்கு நாம் முயன்று கொண்டிருக்கின்றோம். எமக்கு தீமையே ஏற்படுகின்றது. நன்மையைக் காணவில்லை என புலம்பிக் கொண்டிருக்கின்றோம். ஏன் எமக்கு இவ்வாறு ஏற்படுகின்றது, நாம் செய்ய வேண்டியது என்ன என்று தெரியாமல் தவிக்கின்றோ்ம். பல்வேறு சத்தங்கள் எமது காதுகளில் கேட்டுக்கொண்டு இருக்கின்றது, ஆனாலும் உண்மையை அறிய முடியாத விதத்தில் நடந்து  கொண்டிருக்கின்றோம்.

இறைவன் சொல்கின்றார் அவரிடத்தில் அன்புகூரும்படியாக. எவ்வாறு அன்பு கூறுவது அவர் கூறிய சட்டங்களை ஏற்று செய்ய  வேண்டியது மட்டுமே, 

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தராகிய ஆண்டவராலே இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு நன்மை உண்டு, மரணம் இல்லை.

கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவர் கற்பனைகளைச் செய்தால் நன்மையை அடைந்து மரணத்தை வெல்வோம்.

கர்த்தருடைய வேதாகமம் இவ்வாறு சொல்கின்றது 
 இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.
 நீ பிழைத்துப் பெருகும்படிக்கும், நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரவும், அவர் வழிகளில் நடக்கவும், அவர் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன்.
 நீ கேளாதபடிக்கு, மனம் பேதித்து, இழுப்புண்டுபோய், வேறே தேவர்களைப் பணிந்து, அவர்களைச் சேவிப்பாயானால்,
 நீங்கள் சுதந்தரிக்கிறதற்கு யோர்தானைக் கடந்துபோகிற தேசத்தில் நெடுநாள் வாழாமல், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்பதை இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.
 நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு,
 கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.
உபாகமம் 30


இதோ பார், வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன். அது இதுதான்; இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு. அவரைப் பின்பற்றி அவரது வழியில் நட. அவரது கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் கடைப்பிடி. அப்போது நீ வாழ்வாய், நீ பலுகுவாய். நீ உடைமையாகக் கொள்ளப்போகும் நாட்டில் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசிவழங்குவார். ஆனால், உனது உள்ளம் விலகிச் சென்று, நீ செவிகொடாமல் கெட்டலைந்து, வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றுக்குப் பணிவிடை புரிந்தால், இன்று நான் உனக்கு அறிக்கையிட்டுக் கூறுகிறேன். நீ நிச்சயம் அழிந்துபோவாய். நீ உரிமையாக்கிக் கொள்ளுமாறு, யோர்தானைக் கடந்து சென்றடையும் பூமியில் உன் வாழ்நாள் நீடித்திருக்காது. உன் மேல் இன்று நான் விண்ணையும் மண்ணையும் சான்றாக அழைத்து, வாழ்வையும் சாவையும், ஆசியையும் சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் வாழும் பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு பாராட்டு; அவரது குரலுக்குச் செவிகொடு; அவரையே பற்றிக் கொள். ஏனெனில், அவரே உனது வாழ்வு; அவரே உன் நீடிய வாழ்வு. அதனால், ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில் நீ குடியேறுவாய். (இணைச் சட்டம் 30)

Rate www.Tamil.bid
Advertisements Box is loading Ads...

Contact Form

Name

Email *

Message *