ரோமர்களின் ஆட்சி உலகளாவிய கிறிஸ்தவமான கத்தோலிக்கம் ஆகி ஐரோப்பா எங்கும் பரவ ஆரம்பித்தபோது மறுபுறும் துருக்கியர்களால் பிடிபட்ட மத்திய கிழக்கு இஸ்லாமியர் கைகளில் தவழ ஆரம்பித்தது.
2000 வருடங்களுக்கு முன் வந்த இயேசு கிறிஸ்துவை பின்பற்றியோர் ரோமர்களின் சுயாட்சியில் ஆரம்பநாட்களில் துன்பத்தையும் மீதி பாதிகளில் சுதந்திரத்தையும் அனுபவித்த போது யூதர்கள் 2000 வருடங்களுக்கு முன் தமது ஆலயமானது தீக்கிரையானதை தொடர்ந்து எங்கும் ஓடத்தொடங்கினர். அவர்களை ரோமர்களின் சுயாட்சி நிம்மதியாக விட்டுவிடவில்லை.
பிற்பாதியில் கிறிஸ்தவ கத்தோலிக்கருக்கு சாதகமான ஆட்சியை ரோம் தொடங்கி பல்வேறு கிறிஸ்தவ கத்தோலிக்கருக்கு முக்கியமான இடங்களில் ஆலயங்களை கட்டி தானும் ரோம் எனும் மார்க்கத்தை விட்டு ரோமன் கத்தோலிக்கமாகிய போது போப் எனும் கத்தோலிக்க தலைவரை உயர்வாக கருதி ஆட்சி மாற்றம் போப்பிற்கு கிடைத்தது.
ரோம சாம்ராஜ்யத்திற்கு பின் வந்த துருக்கிய ஆட்சியில் மத்திய கிழக்கை விட்டு கத்தோலிக்கரும் வெளியேற்றப்பட்டனர். ஏற்கனவே யூதர்கள் வெளியேறி விட்ட நிலையில் 1000 வருடங்களுக்கு முன் வந்த துருக்கிய இஸ்லாமியர்களால் இஸ்ரேல் ஆளப்படத் தொடங்கியது.
1100ல் தொடங்கிய துருக்கிய ஆட்சி பல்வேறு விதங்களில் இஸ்ரேலியருக்கு கிடைத்த போதிலும் இஸ்ரேலியர் அதைக் குறித்த கரிசனை கொள்ளவில்லை. அவர்கள் தங்கியிருந்த பணவசதி நிறைந்த நாடுகள் அவர்களை சொந்த தேசம் செல்ல தாமதப்படுத்திக் கொண்டிருந்தன.
தமக்கான சொந்த நாட்டை சென்று பார்த்து வரும் யூதர்கள் தங்களுடைய சொந்த நாட்டில் வாழ்ந்து விட வேண்டும் என்ற அவாவை நிறைவேற்றிக் கொள்ள விருப்பமற்றவர்களாக இருந்தனர். இன்றைய தமிழர்கள் வெளிநாடுகளில் கிடைக்கும் வசதி கருதி தங்கள் சொந்த நாட்டை சிங்களவர் ஆள்கின்றனரே என எண்ணம் வரும்போது அங்கு போக வேண்டாம் என எண்ணுவது போல இவர்களும் எண்ணிக் கொண்டிருந்தனர்.
இவ்வாறு தங்கள் நாட்டுக்கு போவதா அல்லது தாங்கள் வேறு நாடுகளில் அனுபவிக்கும் இன்பம் போதுமா எண எண்ணிக்கொண்டிருந்த இஸ்ரவேலரை அவர்களது இன்பத்தை தாெலைக்க வைத்த ஜெர்மானிய நாசிப்படைகளின் எழுச்சியே கடைசியில் சொந்த நாட்டிலேயே செத்து மடிவது என்ற எண்ணத்தை 1914 தொடக்கம்1948 பிரித்தானிய ஆட்சியில் நடைமுறைப்படுத்த முயன்றனர்.
உலகம் முழுவதையும் ஆண்ட பிரித்தானிய வல்லரசின் கரங்களில் துருக்கி 1914ல் விழுந்த பின் 34 ஆண்டுகள் பிரித்தானியாவின் வசம் இருந்தது. 1948ல் தன்னிடம் இருந்த இஸ்ரேலை சுதந்திரம் கொடுக்கும் படி எண்ணிய போது பலஸ்தீனத்தில் கைவிடப்பட்ட துருக்கி அடிமைகள் ஒரு காலமும் எண்ணியிராத பலத்த அடி கிடைத்ததென்கின்றனர் பக்கத்து நாட்டு அரபிய நாடுகள்.
துருக்கியராலும் ஆளப்படுவோம், பிரித்தானியாவினாலும் ஆளப்படுவோம் ஆனால் இஸ்ரேல் எனும் எதிரியால் மட்டும் இவர்கள் ஆளப்பட்டுவிட விடமாட்டோம் என வெறிகொண்டவராய் கிளர்ந்தெழும்பினர் அரபிய நாடுகள். எந்த திக்கில் செல்வது என எதிர்பார்க்கும் முன்னே அரபிய நாடுகளின் துாண்டுதலால் இஸ்ரேலை விட்டு கிளம்பினர் அத்தேசத்து குடிகள். யுத்தங்களில் அரபு நாடுகள் தோற்கடிக்கப்பட கைவிட்டப்பட்டவர்களை பலஸ்தீனர்கள் என அறிவித்து அந்நாட்டு மக்களை இஸ்ரவேலரோடு போராட வைக்கிறது உலகம்.
ஆசை பேராசையான பலஸ்தீனர்கள் இருந்த இடமும் கிடையாமற் போகச் செய்த அரபு நாடுகளின் ஆசைத் துாண்டுதலால் இன்னமும் இஸ்ரேலுக்கு எதிராக தீது செய்து வருகிறார்கள்.
1948ற்கு பின் யுத்தங்களில் இஸ்லாமியர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறினால் முழு இஸ்ரேலையும் பிடித்து யூதரை அழித்தொழித்து விட்டு முழு இஸ்ரேலையும் அரபு தேசமாக மாற்றி விடலாம் என கண்ட கனவு கடைசியில் நனவாகிப் போனதும் பலஸ்தீனராக தனித்து விடப்பட்டதும் இவர்களது துரதிர்ஸ்டமே.