நாங்கள் ஏன் வேறு சபை மக்களை மிக தாழ்வாக பார்க்கிறோம் ?
நாங்கள் ஏன் வேறு சபை மக்கள் என பிரித்து பார்த்து பழக தயங்குகிறோம்?
நமது சபை மக்களுடன் மாத்திரமே நமது உறவு தொடர்ந்து இருந்து வருகிறது. வேறு சபை மக்களுடன் பழகத் தயங்குகிறோம்.
ஏன் நமக்கு இவ்வாறான சிந்தனை வருகிறது. மற்ற சபை மக்கள் எமது பார்வையில் கீழாக காணப்படுகிறார்கள் .
நமது உறவு நமது சபை மக்கள் மீது மட்டுமே காண்பிக்கப்படுகிறது. ஏனைய சபை மக்களோடு நாம் உறவு கொள்ள மறுத்து விடுகிறோம்.
எமது சபை பாரம்பரியங்கள் சம்பிரதாயங்கள் பழக்கவழக்கங்கள் கொண்டவர்களை மாத்திரம் ஏற்றுக்கொள்கிறோம்.
அன்று யோனா குறிப்பிட்ட மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்கு புறப்பட்டு சென்ற போதும் அவனது எண்ணம் இதே விதமாகவே காணப்பட்டது.
அவர்கள் தனக்கு உரியவர்கள் அல்ல என்பது போல அவன் செயல்பட்ட விதத்தை நாங்கள் காண்கிறோம்.
எப்படிப்பட்ட ஆளாக இருந்தாலும் மக்கள் எப்படிப்பட்டவர் காணப்பட்டாலும் அவர்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்கவில்லை
ஆனால் கர்த்தராகிய இறைவன் அவர்களை நேசிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. அவர்களை நேசிக்கிறார் அவர்கள் அவருடைய நற்செய்தியை கேட்பதற்கு அவர் விரும்புகிறார்.
யோனாவை போன்ற எண்ணம் கொண்டவர்களாக நாங்கள் மக்களை ஒதுக்கி வைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் இறைவன் அந்த மக்களை தம் பக்கமாக சேர்ப்பதற்கு விரும்பி கொண்டிருக்கிறார்
அந்த இறைவனின் விருப்பத்திற்கு மாறாக நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
எங்களால் மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.
நாங்கள் எங்களது சிந்தனைகளால் மற்றவர்களை தூரம் பிரித்து வைத்துக் கொண்டிருக்கிறோம்
ஆனால் வேறு சபை மக்கள் அசுத்தமானவர்கள் அல்ல.
அவர்கள் பரிசுத்தமானவர்கள் என நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அவர்களும் ஒருநாள் பரலோகத்திலே எம்மோடு இருக்கப் போகிறார்கள்.
ஆகவே எல்லா மக்களையும் நாம் எமது சகோதரர்களாக பார்த்து பழக வேண்டியதாக இருக்கிறது.