இலங்கையில் உலக தீவிரவாதிகளின் தாக்குதலால் கிறிஸ்தவர்கள் இரத்தம் சிந்தி மரித்தனர். உலகமே அதிர்ந்து நின்றது. சமாதானம் பேசும் குழுவினர் வெறும் வாய்ப்பேச்சோடு செய்த செயல் கண்டிக்கப்பட வேண்டியது என உலகமே எழுந்து நின்றது.
ஏப்ரல் 21 தற்கொலையாளிகள் மகிழ்ந்த நாள். தாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என எண்ணிய அவர்களோ தாங்கள் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்று பெருமிதம் கொண்டது அன்றே கலைந்து போனது.
இலங்கையின் கிழக்கிலும், மேற்கிலும் ஓரிரண்டு மணித்தியாலத்துக்குள் குண்டு சத்தம் கேட்ட தேவாலயங்களை நோக்கி அக்கம் பக்கத்தினர் ஓடி வர தேவாலயங்களில் இருந்தோரின் உடல்கள் எங்கும் சிதறி இருந்தன.
கிறிஸ்தவர்களின் மரணம் தோல்வியல்ல. இயேசுவின் மரணம் எப்படி வெற்றியாக உள்ளதோ... அதே வண்ணமாக அன்று மரித்த கிறிஸ்தவர்களின் மரணம் இறைவனின் பார்வையில் அருமையாக உள்ளது.
மரணம் என்பது மனிதனுக்கு தேவனாகிய கர்த்தர் கொடுக்கும் வாழ்வின் இறுதிப் படி. முடிவு முந்தி வருவது தோல்வியாக கருதப்பட முடியாது. அது எப்போதும் வெற்றி தான்.
ஏப்ரல் 21 எப்போதுமே கிறிஸ்தவர்களுக்கு வெற்றி தான்.