நமக்கு வாழ்க்கை பயத்தை உண்டு பண்ணுகின்றதா ?
நாம் பயத்துடன் வாழ்கின்றோமா ?
பயங்கள் எம்மை கலங்கச் செய்கின்றதா ?
வாழ்க்கை பயணமானது எப்போதும் அமைதி நிறைந்ததாக இல்லை. நமக்கு தடுமாற்றங்களும் ஏமாற்றங்களும் வரும் போது பயம் நம்மை ஆட்கொள்கின்றது. எனது வாழ்க்கை இப்படிப் போய்விட்டதே என அழத் தோன்றுகின்றது.
ஆனாலும் நமக்கு ஒரு நம்பிக்கை உண்டு. நம்மை கைவிடாத இரட்சகர் நமக்கு உண்டு, அவர் நம்மைக் காப்பார். நம்மைக் கைவிட மாட்டார். உதவி வரும் கன்மலையாகிய இயேசு கிறிஸ்து நம்மை கவனித்துக் கொண்டிருக்கின்றார், அவர் நம்மை பார்த்து இருக்கின்றார்,
உபாகமம் 31/8
கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.