ஆதாம் ஏவாள் உருவாக்கப்பட்ட காலத்திலேயே இஸ்ரவேல் தேசம் அவர்களுக்கென்று உருவாக்கப்பட்டிருந்தது.
நோவா வின் மகன் சேமின் சந்ததியில் ஆபிரகாம்,
அவர்களுடைய சந்ததியில் ஆபிரகாமிற்கு அத்தேசம் கொடுக்கப்படுவதாக வாக்களிக்கப்படுகின்றது.
ஆபிரகாம் தனது உரிமை மகன் ஈசாக்குக்கு இஸ்ரவேல் தேசத்தை ஒப்படைத்து விடுகிறான்.
ஆபிரகாமின் அடிமைப் பெண் பெற்ற இஸ்மவேலையும் ஏனைய பிள்ளைகளையும் துரத்தி விடுகின்றான்.
(ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான்.
ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான். ஆதியாகமம் 25 )
ஆபிரகாமின் மகன் ஈசாக்குக்கு இஸ்ரவேல் தேசம் தரப்பட்டதாக வாக்களிக்கப்படுகின்றது.
- (ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.
கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு.
இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.
ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால்,
நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார். ஆதியாகமம் 26)
பலத்த எதிர்ப்புக்களை எதிர்கொண்டு இறுதியாக சேபா என்ற பெயர்செபாவில் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றான் ஈசாக்கு.
மக்பேலா எனும் குகை ஆபிரகாமால் விலைக்கு வாங்கப்பட்டு ஆபிரகாமினதும் சாராளினதும் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமாக உள்ளது.
இஸ்மவேலுக்கு 12 பிள்ளைகள்.
ஆபிரகாமின் அடுத்த 3ஆவது மனைவிக்கு பிறந்த மீதியானின் பிள்ளைகளே அரபியர்.
இவர்களை அக்காலத்திலேயே ஆபிரகாம் துரத்தி விட்டார்.
- இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,
மிஷ்மா, தூமா, மாசா,
ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவைகளே.
- ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.
அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.
யக்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றான்; தேதானுடைய குமாரர் அசூரீம், லெத்தூசீம், லெயூமீம் என்பவர்கள்.
மீதியானுடைய குமாரர் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்;