அளவற்ற அருளாளன் என் மீட்பர்,
எனக்கெல்லாம் வல்லோன் அவர்
எனக் கென்றும் ஆறுதல் தரும்
இரட்சகர் இயேசு பிரான்
பாவங்கள் செய்திட்ட என்னை
தம் இரத்தத்தால் கழுவியவர்
என்னை அரவணைக்கும் என்
தாயினிலும் மேலான தேவன்
உலகின் பாவங்கள் சுமந்து
மீட்பினை தரும்படிக்காய் தம்
ஜீவனை உலகிற்கென அருளிய
பரமபிதாவின் ஒரே குமாரனவர்
ஜீவ அப்பமாய் உணவானார்
ஜீவ தண்ணீராய் தாகம் தீர்த்தார்
உலகின் ஒளியாய் வந்தார்
அவர் நியாயாதிபதியான கர்த்தரல்லோ
எருசலேமின் இறைவன் அவர்
இஸ்ரவேலின் ராஜா வல்லோ
உலகத்தினை நியாயம் விசாரிப்பவர்
உன்னை நித்திய ஜீவன் பெற அழைக்கிறாரே...
www.uyir.tk
Canada/
+17788003315
fax
+16463652291
Sri
Lanka
+94775076775