அபிஷேகத்தால் வல்லமையால் தேவன் எங்களை நிரப்ப நாம் அவருக்குள் ஜீவிக்க வேண்டும்.
அவர் வல்லமையை அனுபவிக்க அவர் அபிஷேகத்தால் நிறைய வேண்டும்.
தேவாதி தேவன் பரம பிதாவாக இருக்கிறார். பரம தகப்பன் ஆக இருக்கிறார். காக்கும் கரங்கள் அவரிடமே உள்ளது.
நாங்கள் தேவனின் பிள்ளைகளாக நித்திய நித்தியமாக எங்களை நித்திய காலத்திற்கு வாழ வைக்கப் போகிறார்.
நாங்கள் நித்திய நித்திய காலமாக வாழப்போகிறோம். இந்த உலகம் கொஞ்ச காலத்துக்கு தான்,
இந்த உலக பாடு சிறிது காலம் தான். அதன் பின் நாங்கள் பரலோகத்திலே பல்லாயிரக்கணக்கான வருடங்களாக வாழப் போகிறோம்.
புதிய வானம் புதிய பூமி என்பது எமக்கு தரப்பட உள்ளது.