இக்காலம் கர்த்தர் எம் ஆவியுடன் இடைபடுகின்ற காலம்.
இயேசுவில் விசுவாசம் வைத்து இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் தம் ஆத்துமா எனும் ஜீவனில் நீண்டகால வாழ்வை வாழ தகுதியுடையவர்கள்.
இவ்விதமாய் நீண்ட காலத்திற்கான ஜீவனை பெற்றவர்கள் மீது பரிசுத்த ஆவியானவர் செயற்படுகின்றார்.
தமது சபையாக பரிசுத்த ஆவியானவரின் கீழாக இயேசுவின் விசுவாசிகள் நடத்தப்படுகின்றார்கள்.
ஆவிக்குள்ளாக கிறிஸ்தவர்கள் தேவனை கிட்டிச்சேர பரிசுத்த ஆவியானவர் தொடர்ந்து கிரியை நடப்பிக்கின்றார்.
மனிதன் பாவம் செய்தபோது இழந்து போன சரீரத்தை திரும்பப் பெறவே இயேசு தமது சரீரத்தை சிலுவையில் பலியாக்கி சரீரத்தின் அதிபதி உரிமையை பெற்ற சாத்தானின் தலையை நசுக்கிப் போட்டார்,
இயேசுவின் சிலுவை மரணத்தினால் சரீரத்தின் பாவம் நீங்குவதும் அது மீள தேவனுக்கு உரித்தாவதுமே இயேசுவின் செயல்.
மீட்கப்பட்ட சரீரத்தை நிர்வகிக்கவே பரிசுத்த ஆவியானவர் நமது ஆவியோடே உறவாடி சரீரத்தின் மேல் ஆளுகை செய்கின்றார்.
சாத்தான் மனித சரீரத்தை கைபற்றி பின் ஆத்துமாவையும் மனித ஆவியையும் கைபற்ற எடுத்த முயற்சியில் இயேசு இடைபட்டு சிலுவை சுமந்ததால் சாத்தான் தோற்று போனான்.
இயேசு வெற்றி பெற்று சரீரத்தை ஆள பரிசுத்த ஆவியானவரை எமது ஆவிக்குள் நிறுத்தி ஆத்துமாவையும் சரீரத்தையும் ஆள உரிமம் கொடுத்துள்ளார்,
இயேசு மீண்டும் வரும்வரை கர்த்தருடைய ஆவி மாம்சமான யாவர் மேலும் ஊற்றப்பட்டுக் கொண்டிருக்கும்.
பரிசுத்த ஆவியானவருக்கு உனது ஆவி, ஆத்துமா, சரீரத்தை ஒப்புக்கொடு, அதற்கு இயேசுவை விசுவாசி.