உன்னையும் என்னையும் மீட்கவே வந்திட்ட
மாபெரும் அன்பரின் விந்தை செயலிது
எத்தனை மா கிருபை அவரது
என்னால் என்றுமே மறந்திட முடியா தவர்தம்
ஜீவனை ஈந்திட்டார் எனக் கொரு புதுவாழ்வளிக்க
முழு உலகத்தை ஆதாயப்படுத்தினாலும்
தன் ஜீவனை நஷ்டப்படுத்தி விட்டால் அதனால்
என்ன பலன் என்றே கேட்டவர் அவர்
தம் உயிரை அர்ப்பணித்த காட்சியை கண்டபின்னும்
ஏன் இந்த தயக்கம் அவரண்டை சேர