கர்த்தருடைய ஆலயத்துக்கு போவோம் வாருங்கள் என்று சங்கீதம் 122:1 ல் வாசிக்கக் காணலாம்,
உலகம் தர முடியாத சந்தோசம், சமாதானத்தை கர்த்தருடைய ஆலயம் எமக்குத் தந்தது.
இன்றைய காலகட்டத்தில் கொள்ளை நோய்கள் நம்மை தடுத்து நிறுத்துவதாக தென்படலாம்.
எம்மால் சமாதானத்தைக் கண்டடைய முடியாதபடி இவை நம்மை தடுத்து நிறுத்தலாம்.
ஆயினும் நாம் இரண்டு அல்லது மூன்று பேர் கர்த்தரை தேடும் இடத்தில் நமக்கு சமாதானம் உண்டாகின்றது.
ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
மத்தேயு 18:20
ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
மத்தேயு நற்செய்தி அதிகாரம் – 18 – திருவிவிலியம்