"என் மீட்பர் எனக்கு செய்த
நன்மைகளை நான் நினைக்கையில்
என் நெஞ்சமே நீ உருகாயோ"
அவர் செய்தவைகளை
நினைத்துப் பார்க்கையில்
நன்றி சொல்லாத என் வாழ்க்கை
உண்மையிலேயே வீண்
நான் நன்றி சொல்லிட கற்றுத்
தாரும்
நான் நன்றி சொல்ல மறந்திருந்தால்
தயவு செய்து என் மீது குற்றம்
சுமத்தாதிரும்
என்றாலும் என் நெஞ்சம்
உருகாதோ என்று நீர் பார்க்கின்றீர்
என் குற்றம் உமக்கு முன்பாக
எழும்பாதபடிக்கு
கர்த்தாவே நீர் என்னை
மன்னித்தருளும்
நான் உம்மை விட்டு விலக
கூடாது
நாம் உம்மை ஒரு போதும்
மறக்க கூடாது
என் ஆண்டவரே
நீர் எனக்கு செய்த
நன்மைகளுக்கு நான்
நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும்
என்றாலும் இந்த நன்றியை விட
உமக்காய் நான் வாழ வேண்டும்
என்பதே உமது அவா
கர்த்தாவே நீர் என்னை
வனைந்தீர்
உமது பாதையில் என்னை
நடத்தும்
அதற்காகவாவது
என்
நெஞ்சமே நீ
உருகாயோ