திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், பொது அமைதி ஏற்படுத்திட வலியுறுத்தியும் திருவள்ளூர் மாவட்ட அனைத்து கிறிஸ்துவ திருச்சபை மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் கலவரம் தொடங்கி இரண்டு மாதமாகி விட்டது. கிட்டத்தட்ட 250 கிறிஸ்தவ தேவாலயங்கள், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. 200 கிராமங்கள் தீவைத்துக் கொளுத்தப் பட்டிருக்கின்றன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொதுச்சொத்துக்கள் அழிக்கப் பட்டிருக்கின்றன. இறந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகம் என கணக்கிடப்பட்டிருக்கிறது.
இந்திய பிரதமரும், உள்துறை அமைச்சரும் கர்நாடகத் தேர்தலில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டபோது தொடங்கியது மணிப்பூர் கலவரம். இத்தனை நடந்த பின்னும் இந்த விவகாரத்தில் பிரதமர் ஒரேயொரு வார்த்தைகூட பேசவில்லை. பிரதமரும் உள்துறை அமைச்சரும் உடனுக்குடன் இந்த விவகாரத்தில் அக்கறை காட்டியிருந்தால் இந்தக் கலவரம் அன்றே முடிந்திருக்கும். அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளில் மோடி அக்கறை காட்டவேண்டும் என இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் குறிப்பிட்டனர்.
இதனைத் தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்தில் அமைதி ஏற்படுத்திட வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
mailto:news@tamil.bid+94775076775
https://www.Tamil.bid ல் விளம்பரங்களை வெளியிடுவதற்கு தொடர்புகளுக்கு ஈமெயில் mailto:ad@tamil.bidவட்சப்free advertisements on www.tamil.bid whats app groups 01 - 02 - 03 - 04 - 05 - 06 - 07 - 08 - 09
youtube official-Tamil-Bid facebook tamil - wwwTamilbid - life-partner - clj2c
Contact / WhatsApp: +94775076775, PayPal / Email: admin@tamil.bid